Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 1,534 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 1,534 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலில் டெக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி உயர்ந்தன. பார்தி ஏர்டெல், எட்டர்னல், ஹெச்சிஎல்டெக் பங்குகளும் ஏற்றம் கண்டன.

பகிரவும் WhatsApp Facebook

வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதால், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று வலுவாக உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் வர்த்தகத்துக்குச் சாதகமாக அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,533.72 புள்ளிகள், (2.11 சதவீதம்) அதிகரித்து 74,315.61 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74,330.29 புள்ளிகளை எட்டியது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 374.65 புள்ளிகள் (1.66 சதவீதம்) உயர்ந்து 22,997.35 புள்ளிகளில் முடிவடைந்தது. இது செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகான அதிகபட்ச நிறைவாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் டெக் மகிந்திரா, ஐசிஐசிஐ வங்கி உயர்ந்தன. பார்தி ஏர்டெல், எட்டர்னல், ஹெச்சிஎல்டெக், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ் பங்குகளும் ஏற்றம் கண்டன.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான விலை வரம்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு உயர்ந்தது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டிரென்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் சரிந்தன.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.34 சதவீதம் குறைந்து, பீப்பாய்க்கு 103.6 அமெரிக்க டாலராக இருந்தது. ரூபாயின் நிலைத்தன்மையும் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் குறித்த நம்பிக்கையும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

எனினும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் சரிவு நீடித்தது. பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 1.52 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 0.40 சதவீதமும் குறைந்தன.
துறை வாரியாக தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயுப் பங்குகள் முன்னேறின. மூலதனப் பொருட்கள், மின்சாரம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பிரிவுகள் சரிந்தன.

ஆசியாவில் தென்கொரிய, ஜப்பான் சந்தைகள் கடுமையாகச் சரிந்த நிலையிலும் இந்தியச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. முந்தைய நாள் ஏற்பட்ட இழப்புகளை முக்கியக் குறியீடுகள் ஈடுசெய்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.1,857.44 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருந்ததாக பங்குச்சந்தைத் தரவுகள் தெரிவித்தன.

முந்தைய செய்தி
wipro வருவாய் ரூ.24,753 கோடியாக உயர்வு
அடுத்த செய்தி
DEE Development நிறுவனத்துக்கு ரூ.46 கோடி ஆர்டர்

தொடர்புடைய செய்திகள்